மழை

வீட்டில் ஒரே புழுக்கம்

மேல் மாடிக்கு செல்லவே பயம்
அனல் காற்று .....
வேர்வை கொட்டியது
வேகமாக ஓடும் மின்விசிறி
சரியாக நின்றது மூன்று மணிக்கு .
காலம் தவறாத மின்வெட்டு .
அவசரமாக அனைத்து ஜன்னல்களையும்
திறந்தேன் .
நாற்காலியை இழுத்துபோட்டு
வலதுகாலுடன், இடது காலையும் பின்னி ,
கால்களை ஜன்னலின் மேல் சாய்த்தேன் .
ஒய்யாரமாக சாய்ந்து
சௌகரியமாக அமர்ந்து கொண்டே
பேனாவில் கிறுக்கினேன் ....
கவிதைக்காக ....
லேசாக தென்றல் ....
சில்லென காற்று.....
திரை சீலைகள் என் முகத்தை மூட ...
அதைவிலக்கி சாலையை பார்த்தேன் ...
தூறல் விழுந்துகொண்டிருந்தது .
மண்வாசனை மனதை மயக்க
லயித்து போனேன் ....
சிறிது நேரம் தான் ....
சட சட வென காற்றுடன்

மழை ....

என் கவிதையாக .
Dedicated to my orkut friend KK (Kamala Kannan)

Comments

Popular Posts