சமுதாயத்தின் மேல் எனக்குள்ள கோபம் நியாயமானதா ?

பலமுறை யோசித்து  பார்த்திருக்கிறேன் ....இன்னும் விடை தெரியவில்லை .....
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகம் இப்போது இல்லை ....எங்கும் எதிலும் பேராசை ,போட்டி ,பொறாமை.....எல்லோரும் பண ஆசை பிடித்து அலைகின்றனர் .மனிதாபிமானம் குறைந்து எங்கும் எதிலும் வியாபார நோக்கமே !!!
ஏன் இது ?எதனால் ? மனித மனங்கள் மாறியதா ?அல்லது நாகரீக வளர்ச்சியா ? அல்லது மேற்சொன்னதா ?
புரியவில்லை ....குறுகிய மனித மனம். அவசர உலகம் ,லஞ்சம், ஊழல் என்ற பேய்கள் ....உலகம் வேகமாக நகர்கிறது அழிவை நோக்கி ....அதற்க்கு ஏற்றார் போல் இயற்கை  பேரழிவுகள்.....
ஏழை பணக்காரன் இடையே உள்ள வித்தியாசம் அதிகரிப்பு , அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள் , வேகமாக சுரண்டப்படும் இயற்கை வளங்கள் ,சுயநலம், நாட்டுப்பற்றின்மை ,இப்படி நாட்டிற்க்கு நாடு எல்லாம் மாறுபடுகிறது. விடிந்ததும், நேற்று இரவு என்ன நடந்ததோ என தலைப்புசெய்திகளை பார்க்கும் அவலம்.....மறுக்கப்படும் நீதி ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,மனித உரிமை மீறல் ,அடுத்த நாட்டின் மீது படையெடுத்தால் அல்லது ஆக்கிரமித்தல் ,போராட்டங்கள் ,வன்முறைகள் ,.....எங்கே செல்கிறது இந்த மனித இனம் ? அழிவை நோக்கி வேகமாக செல்கிறோமா ? எத்தனை பேர் யோசித்தீர்கள் ?  தெருவில்  இறங்கி போராடும் போராட்ட குணம் மக்களிடம் மழுங்கி விட்டது . யாரும் போராட தயாராக இல்லை . "எத்தனை அடிச்சாலும் தாங்குறான் ,இவன் ரொம்ப நல்லவன்டா ".....என்பது சரிதான் . இளைய சமுதாயம் எதையும் செய்ய தயாரில்லை , முதியவர்களின் காலம் கடந்து விட்டது ,அப்போ ...யார் தான் இந்த நாட்டையும் அழகான இந்த பூமியையும் அடுத்த தலை முறைக்கு அழிவின்றி வழங்குவது ?
எல்லோரும் எனக்கென்ன என்றிருந்தால் யார் தான் முன்நெடுத்துசெல்வது?
எங்கேயும் பரவியுள்ள பேராசை என்ற விஷ கிருமிகளை எப்போது ஒழிப்பது ? இன்னும் காத்திருக்கவேண்டுமா ?எல்லோரும் உறங்கிகொண்டிருக்கிரார்களா ?
மீண்டும் புதியதோர் உலகம்படைக்கப்பெறுமா?
விடை தெரியவில்லை .



Comments

Popular Posts